வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம், பொட்டல் புதூரை சேர்ந்தவர் ஷேக். இவரது மகன் முகம்மது ஷ்யாம் கடையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற முகம்மது வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவரின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

முதலில் பிரம்பால் அடித்த ஆசிரியர், பின்னர் முகம்மது முகத்தில் புத்தகத்தை தூக்கி அடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மாணவன் முகம்மதை அவனது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காயம் ஏற்படும் வகையில் ஆசிரியர்கள் செயல்படக்கூடாது எனவும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினரை வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications