மர்மக் காய்ச்சலுக்கு பலியான மாணவன் – செய்தியறிந்து தந்தைக்கு ரத்தக் கொதிப்பு அதிகரிப்பு
சேலம்: சேலத்தில் மர்மக்காய்ச்சலுக்கு பலியான சிறுவனின் தந்தையும் ரத்த அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த முரளியின் மகன் கோபிநாத். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இவர் பெயர் அறிய இயலாத மர்ம காய்ச்சல் நோய்க்கு பரிதாபமாக பலியாகியுள்ளார்.
கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த இவரை காய்ச்சல் தாக்கியது. வீடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.
அவரது ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் எந்த வகை காய்ச்சலால் மாணவன் இறந்தார் என்பது தெரிய வரும்.
இந்த நிலையில் மாணவன் கோபிநாத்தின் தந்தையும், தனியார் பேருந்து நடத்துனருமான முரளி கடந்த 15 நாட்களுக்கு முன்பே ரத்த அழுத்தம் காரணமாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் இச்செய்தியால் பாதிப்படைந்த அவர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications