திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான்
Recommended Video

குடியாத்தம்: திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார்.
இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள்.

டியூஷன் டீச்சர்
பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார்.

கள்ளக்காதலியான டீச்சர்
அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.

மைசூரில் மீட்பு
இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார்.

தர்ம அடி
இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications