ஜல்லிக்கட்டு.. மாணவர் பேரணியில் போலீஸ் தடியடி.. மதுரையில் பரபரப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடைபெற்ற மாணவர்கள் பேரணியில் போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவர்களை தடியால் அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்கள். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டப் பேரணியில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் அணிந்து திரண்டு சென்றனர்.

இந்தப் பேரணியின் போது குறிப்பிட்ட எல்லைக்கப்பால் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பேரணியில் வந்த மாணவர்களுக்கும் கடும்வாக்குவாதம் நடைபெற்றது. மேலும், தடுப்புகளைத் தாண்டிச் செல்ல மாணவர்கள் முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் மாணவர்களை தடியால் அடித்து பேரணியை கலைக்க முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தகராறு ஏற்றபட்டது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications