கடலூர் அரசு அரசுப் பள்ளியில் பயங்கர மோதல்.. இரும்புக் கம்பிகளுடன் அடித்துக் கொண்ட மாணவர்கள்
கடலூர்: கடலூர் அருகே பள்ளி மாணவர்கள் பயங்கரமாக மோதி கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் பள்ளியில் விளையாட்டு போடடி நடந்துள்ளது. அப்போது திருவந்திபுரம் காலனியை சேர்நத மாணவர்களுக்கும், பில்லாளிதொட்டி பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழககு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இருதினங்கள் விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி விட்ட நிலையில் திடீரென இரு தரப்பு மாணவர்களும் திமு திமுவேன பள்ளி வாளகத்திற்குள் இரும்பு கம்பி, உருட்டு கட்டை உளளிட்டவறறால் பயங்கரமாக மோதி கொண்டனர்.
இதனால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் மாறியது. இதனால அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் தடுக்க முயன்ற போது அவருக்கும் அடி விழுந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த உதவி தலைமை ஆசிரியை சித்ரா மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றார். அவரை பிடிதது மாணவர்கள் தள்ளி விட்டதால் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். இருவரையும் பிற ஆசிரியர்கள் மீட்டு கடலூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இநத சம்பவம் பற்றி அறிந்த சாலக்கரை பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறிதது உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் டிஎஸ்பி பொறுபபு லோகநாதன் தலைமையில் கடலூர் வட்டாடச்சியர் சிவா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துககு சென்று விசாரணை நடததினர்.
அப்போது பில்லாளிதொட்டி பகுதியிலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர். இதனால இருதரப்பு மாணவர்களையும் போலீசார் வேனில் ஏ்ற்றி போலீஸ நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரத்தில் பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை மறித்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications