+2 மாணவருக்கு பாட்டில் குத்து.. +1 மாணவர் வெறிச் செயல்.. கடலூரில் பரபரப்பு
கடலூரில் பள்ளி மாணவர்களுக்கிடையே கடும் மோதல் உருவானது. இதில் பிளஸ் 1 மாணவர் +2 படிக்கும் மாணவரை பாட்டிலால் குத்தி தாக்கியுள்ளார்.
கடலூர்; கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவரை பாட்டிலால் குத்திய தாக்கியுள்ளார். இதனால் கடலூரில் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள் கிழமையான இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களுடையே திடீரென்று மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, பள்ளியில் இருந்து +2 மாணவர் கிருபாநிதி வெளியில் சென்றுள்ளார். அப்போது, மீண்டும் மாணவர்களுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த மோதலில் +2 மாணவர் கிருபாநிதியை +1 மாணவர் விக்கி என்பவர் உடைத்து கையில் தயாராக வைத்திருந்த பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் கடுமையாக காயமடைந்த கிருபாநிதியை, அக்கம்பக்கத்தினரும், சக மாணவர்களும் அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications