மானூர் பள்ளி மாணவர்கள் மோதல் - 15 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை.யில் அரசு உதவி பெற்று செயல்படும் பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு இரு பிரிவு மாணவர்களிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டது. இதில் இரு பிரிவு மாணவர்களும் மோதி கொண்டனர். இதில் வடக்கு வாகைகுளத்தை சேர்ந்த பிளஸ்டூ மாணவர் மாரிமுத்து என்ற மாணவரை அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாரிமுத்துவும் அவரது நண்பர்களும் திருப்பி தாக்கினர்.
இது தொடர்பாக மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 15 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாங்குநேரி பாஸ்டல் சிறையில அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications