பள்ளிச் சீருடையுடன் “புல்” போதையில் சாலையில் மயங்கிக் கிடந்த நாகை மாணவர்கள்!
சீர்காழி: நாகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் மது அருந்திவிட்டு பள்ளிச் சீருடையிலேயே சாலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவர்கள் மதுகுடித்துவிட்டு பள்ளி சீருடையில் தெற்கு மாட வீதியில் சாலையில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அப் பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர்.

இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விசாரணையில் 2 மாணவர்களும் புங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்களை பெற்றோரால் அழைத்து சென்றனர்.
மாணவர்கள் மது போதையில் சாலையில் கிடந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை பலருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வருகிறார்கள்.இந்த சம்பவம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அதிர்ச்சியினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications