நெல்லையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக திறக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம்: மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி?
ஊருக்கு ஒதுக்குப்புறமாக திறக்கப்பட்ட பள்ளிக்கட்டிடத்தால் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை : முதல்வர் திறந்து வைத்த புதிய பள்ளிக் கட்டிடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல்களுக்கு நடுவில் இருப்பதால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகப் பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இடைக்காலில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிக்கு புதிய கட்டிடம் இடைக்கால் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்லும் சாலையில் வயல்வெளிக்குள் கட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் நாபர்டு வங்கி மூலம் இந்தக் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் பள்ளியின் சுவர்களில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை கடந்த நவம்பர் 23ம் தேதி நெல்லை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்தப் பள்ளிக்கு நடைபாதை சரியாக அமைக்கப்படாததால் மாணவ, மாணவிகள் வயல்வெளிகளுக்கு மத்தியில் சிரமத்துடன் நடந்து வந்து படித்து வருகின்றனர்.
பள்ளி செல்லும் தற்போதைய சாலையில் பயன்படாத கட்டிடம் மற்றும் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் பயத்துடன் முன்னேச்சரிக்கையாக தனியாக செல்லாமல் கும்பல் கும்பலாக சென்று வருகின்றனர்.
மேலும் புதிய கட்டிடத்தின் சில பகுதிகள் பயன்படுத்தாமல் பூட்டி கிடப்பதால் அங்கு விஷ ஜந்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications