தந்தையர் தினம்.. அப்பாக்களுக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்த மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடிஇராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தந்தையர் தினம் இன்று ( 19.06.2017) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா தலைமை வகித்தார். எட்டாம் வகுப்பு'அ ' பிரிவு மாணவர்களின் தந்தையர் தான் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Students honor their father in Karaikudi school

மாணவர் தீபக் அனைவரையும் வரவேற்றார். எட்டாம் வகுப்புஅ பிரிவு மாணவர்கள் அவர்களின் தந்தையைப் பற்றி கவிதைகள் கூறி, பாடல்கள் பாடினர்.மாணவர்கள் அவர்களின் தந்தைக்கு பொன்னாடைப் போற்றியும், பரிசு கொடுத்தும் கௌரவித்தனர்.

Students honor their father in Karaikudi school

மாணவர்களின் தந்தைகள், இந்நிகழ்ச்சியால் மன மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்ச்சியை மாணவி தீபிகா தொகுத்து வழங்கினார். மாணவர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி அவர்கள் செய்திருந்தார்.

Students honor their father in Karaikudi school

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Father's day was celebrated in Ramanathan school in Karaikudi today. Students honored their father in the function.
Please Wait while comments are loading...