ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் ஏப்- 2ல் போராட்டம்.. மாணவர்கள் அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என மாணவர் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அனைத்து மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று கூறிய மத்திய அரசு கடந்த திங்கள் கிழமை ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு அனுமதியளித்தது.

இதனை எதிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என மாணவர் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் அணைத்து மாணவர்களின் சார்பாக தொடர் போராட்டம் நடைபெற உள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications