சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு.. மாணவ, மாணவிகள்-போலீசார் தள்ளுமுள்ளு!
Recommended Video

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், போலீசார் மற்றும் மாணவ, மாணவிகள் நடுவே பெரும் மோதல் வெடித்தது.
சென்னை பல்கலைக்கழகம் துவங்கி 160 வருடங்கள் ஆகிவிட்டன. இதையொட்டி அங்கு ஆண்டு விழா நடைபெறுகிறது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பகல் 12 மணிக்கு விழா துவங்கவிருந்த நிலையில், 11.30 மணியளவில் அதாவது, முதல்வர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சற்று நேரம் முன்பாக பல்கலைக்கழகத்தில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் அமைப்பில் உள்ள மாணவ மாணவிகள் திடீரென பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலையில் இந்த விழா தேவையா என்று அவர்கள் கோஷமிட்டனர். இளவரசி என்ற மாணவி கூறுகையில், துணைவேந்தர், பேராசிரியர்களுக்கு மினரல் வாட்டர் தருகிறார்கள். மாணவர்களை வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துவர சொல்கிறார்கள். எனவே, மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில் தரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.
இதையடுத்து மாணவ மாணவிகளை குண்டுகட்டாக போலீசார் அங்கிருந்து அகற்றி காவல்துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அப்போது மாணவ மாணவிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல்கலை. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications