கடலுக்கு அருகே நிற்கும் இளைஞர்களை நெருங்க முடியாத போலீஸ்.. ஆவேச முழக்கமிடும் மாணவர்கள்!

மெரீனா கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களை போலீசார் விரட்டியதால் கடலுக்குள் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். போலீசார் அருகில் வந்தால் கடலுக்குள் விழுந்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்

சட்ட முன்வடிவு நகலையும் மாணவர்களுக்கு அளித்தனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் சென்றனர்.

Students protest near sea

தேசிய கீதம் பாடியபடியே தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இளைஞர்கள், பெண்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டு கடலுக்குள் நின்றனர்.

அவர்களை நோக்கி போலீசார் செல்லவே, நீங்கள் அருகில் வந்தால் கடலுக்குள் விழுந்து தற்கொலை செல்வோம் என்று இளைஞர்கள் மிரட்டினர். இதனையடுத்து மெரீனா கடற்கரையில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக அமைதியாக நடந்த போராட்டம் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மெரீனா கடற்கரை போர்கோலம் பூண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+