“துப்பட்டாவை” தூக்கி வீசிய அரசு பள்ளி மாணவிகள்.. “துப்பட்டா போடுங்க தோழி” நூல் ஆசிரியருக்கு வரவேற்பு
“நான் சொல்லிவிட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவர்களுடன் வந்திருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் துப்பட்டா சரியாக போடவில்லை என ஒரு குழந்தையை திட்டிய கதை காதுக்கு வந்தது.”
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாட சென்ற துப்பட்டா போடுங்க தோழி உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் கீதா இளங்கோவனுக்கு துப்பட்டாவை தூக்கி வீசி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும்போது அவர்களை வழிநடத்துவதற்காக, அரசு பள்ளிகளின் முன்னாள் மாணவர்களை வைத்தே அறிவுறுத்தல்களை வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அழைத்து மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.
எழுத்தாளர் பகிர்ந்த வீடியோ
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் அமைந்து உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி மாணவிகளிடம் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் உரையாடினார். இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

துப்பட்டா போடுங்க தோழி
அதில் அப்படி என்ன இருந்தது? நிவேதிதாவே என்ன சொல்கிறார் என்று கேட்போம். "நேற்று கல்வராயன்மலை செல்லங்களிடம் உரையாடியபோது "துப்பட்டா போடுங்க தோழி" நூலைப் பற்றி அதிகம் பேசினார்கள். கற்பு, கருப்பை, காதல் என உடல் அரசியலை விரிவாகவே உரையாடினோம். இன்று கீதா தோழர் வருவதாகச் சொல்லி அவரை துப்பட்டாவை கழற்றி வீசி வரவேற்க முடியுமா எனவும் ஒரு கேள்வி கேட்டுவிட்டு வந்தேன்.

துப்பாட்டாவை வீசி வரவேற்ற மாணவிகள்
நான் சொல்லிவிட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவர்களுடன் வந்திருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் துப்பட்டா சரியாக போடவில்லை என ஒரு குழந்தையை திட்டிய கதை காதுக்கு வந்தது. சரி இன்று எப்படி குழந்தைகள் வரவேற்றார்கள், நேற்று பேசியதன் பயன் இருந்ததா என இரவு கேட்போம் என இருந்தேன். அதற்குள் அருள் ஜெகன் இந்த காணொளியை பதிவிட்டுவிட்டார். குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

சக்திவாய்ந்த தருணம்
போங்கடா... நீங்களும் உங்க துப்பட்டா போடுங்க தோழியும். என் வாழ்க்கையில் இது மிகவும் சக்திவாய்ந்த தருணமாக இருக்கும். நன்றி பெண்களே, நாம் சரியான பாதையில் செல்கிறோம். சம்பவத்துக்கு பிறகு குழந்தைகள் யாரும் துப்பட்டா போடவில்லை என்கிறார் ஜெகன்" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

ஆசிரியர் மகாலட்சுமி
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியரும் செயல்பாட்டாளருமான மகாலட்சுமி பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "துப்பட்டா போடுங்க தோழி நூலின் ஆசிரியர் தோழர் கீதா இளங்கோவன் அவர்களின் மாபெரும் வெற்றி இது!மாதவிடாய், துப்பட்டா போடுங்க தோழி இரண்டும் தோழரின் வாழ்க்கையில் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணிற்கும் மைல்கல். இந்த வீடியோவைப் பார்த்ததும் நெசமாவே செம Vibe ஆகிட்டேன்." என்று பதிவிட்டு உள்ளார்.
கீதா இளங்கோவன் கருத்து
பெண்ணுரிமை சார்ந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் கீதா இளங்கோவன், பள்ளி மாணவிகளுடனான உரையாடலில் அவர்களுக்கான உரிமைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் இந்த திட்டம் சிறப்பான என அவர் பாராட்டி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications