பாஸ் இருந்தும் வேஸ்ட் - கண்டு கொள்ளாத அரசு பேருந்துகள்; மாணவர்கள் புகார்!
தூத்துக்குடி: தூத்துக் குடியிலிருந்து மதுரை செல்லும் பஸ்கள் மாணவர்களை பாஸ் இருந்தும் ஏற்றாமல் செல்வதாக கூறி கலெக்டரிடம் மனு அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பளளியில் படித்து வருகின்றனர்.

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உளள தப்பாத்தி, மேலகரத்தை, வெ்ம்பூர் ஆகிய 3 பஸ் நிறுத்தங்களில் இருந்து சுமா்ர் 250 மாணவர்கள் தினமும் பந்தல்குடி பள்ளிககு செல்கின்றனர். இந்த வழி தடத்தில் நகர பஸ்கள் இயக்கப்படாததால் மதுரை-தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அந்த வழியாக இயக்கப்படும் தூத்துக்குடி பணிமனை பஸ்கள் நிற்காமல் செல்வதால் காலை 7 மணி முதலே காத்திருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தூத்துக்குடியிலிருநது வரும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவிகள் கூட படியில் தொங்கிகொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.
இதனால் பொறுத்த பார்த்த மாணவர்கள் கொதித்து எழுந்து தாலுகா அலுவலகத்திற்கு கலெக்டர் வநதிருப்பதை அறிந்து அங்கு விரைந்தனர். அங்கு அவரிடம் சம்பவம் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது அங்கு இருந்த போக்குவரத்து கழக மேலாளர் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு போதுமான பஸ் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் பாஸ் இருந்தும் டிக்கெட் எடுக்க நடத்துனர் கட்டயாப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் குறிப்பிட்ட நிறுத்தங்களில் பஸ் மாணவர்களை ஏற்றுகிறதா, நின்று செல்கிறதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுககு உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications