ஐஐடியில் மாணவர் தாக்குதல்... மாணவர் சங்கங்கள் போராட்டம்... பதற்றத்தில் ஐஐடி வளாகம்!: வீடியோ
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் போராடின. அதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை ஐஐடியில் மணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ், மாட்டிறைச்சி தடைக்கான எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். இதனால் கோபமடைந்த எதிர்தரப்பைச் சேர்ந்த பாஜகவின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்ரகள் சூரஜை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் அவருடைய கண் கடும் பாதிப்படைந்துள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக சங்கம் உள்ளிட்ட பல மாணவ அமைப்புகள், ஐஐடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஐஐடி வளாகத்தில் படிக்கும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஐஐடி சென்னை டீன், பேச்சு வார்த்தை நடத்தி, சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த மாணவ்ர்கள் மீது, மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஜெ.என்.யூ, ஹைதராபாத் யுனிவர்சிட்டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்ற மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதல் பலி, ஹைதராபாத் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ரோஹித் வெமுலா என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications