திக எலிகள், சினிமா ஊடுருவல் வைரமுத்து... சுப்ரமணியன் சாமி கடுமையான விமர்சனம்!
திக எலிகளின் குருட்டுத் தனமான வெறுப்பு மற்றும் தமிழக சினிமாவில் ஊடுருவி இருக்கும் வைரமுத்துவின் உண்மை நிலை வெளிப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சாமி டுவீட்டியுள்ளார்.
சென்னை : திக எலிகளின் குருட்டுத் தனமான வெறுப்பு மற்றும் தமிழக சினிமாவில் ஊடுருவி இருக்கும் வைரமுத்துவின் உண்மை நிலை வெளிப்பட்டுள்ளதாக பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி டுவீட்டியுள்ளார்.
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த பேச்சுக்கு இந்து அமைப்பினரும் பாஜகவின் எச். ராஜா உள்ளிட்டோரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

ஆண்டாள் பற்றி தான் தவறாக எந்த கருத்தையும் கூறவில்லை என்று வைரமுத்து விளக்கம் அளித்த போதும் அவர் மீது மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். எனினும் வைரமுத்துவிற்கு எதிராக இந்துஅமைப்பினர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
The depravity and blind hatred of DK Eli & TN cinema hack Vairamuthu of Hindus is revealed by his cheap remarks on divinity Andal.
— Subramanian Swamy (@Swamy39) January 16, 2018
வைரமுத்து தன் தவறை உணர்ந்து,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே வாழ்க இந்து நீதி தர்மம்' எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்று மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்தினர்.
இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி வைரமுத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் திக எலிகளின் குருட்டுத் தனமான வெறுப்பு மற்றும் இந்து என்று சொல்லிக்கொண்டு தமிழக சினிமாவில் ஊடுவி இருக்கும் வைரமுத்துவும் ஆண்டாள் மீது வைத்திருக்கும் மோசமான விமர்சனங்களால் அவர்களின் உண்மை நிலை வெளிப்பட்டுள்ளது என்று டுவீட்டியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications