இரவை வீதியில் கழித்த கிராம மக்கள்...மேட்டூர் அருகே திடீர் நிலஅதிர்வால் பொதுமக்கள் பீதி !
சேலம்: மேட்டூர் அருகே உள்ள பூமனூர், மூலக்கடை ஆகிய கிராமங்களில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் இரவில் வீதியிலேயே படுத்து தூங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்துள்ள பூமனூர், மூலக்கடை ஆகிய கிராமங்களில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அதன்பிறகு மேற்கொண்டு எந்த அதிர்வும் ஏற்படவில்லை. இருப்பினும் பீதி அடைந்த கிராம மக்கள், வீடுகளுக்குள் தங்காமல் வீட்டின் வெளியே அதிர்ச்சியுடன் நள்ளிரவு வரை அமர்ந்திருந்தனர். பலர் வீதிகளிலேயே படுத்து தூங்கினார்கள்.
இதுகுறித்து மூலக்கடை கிராம மக்கள் கூறுகையில், நேற்று இரவு 9 மணியளவில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் திடீரென கீழே விழுந்தன. உடனே அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தோம். சில நிமிடங்கள் மட்டுமே ஏற்பட்ட இந்த நில அதிர்வு எங்கள் பகுதியில் இதுவரை ஏற்பட்டது இல்லை என்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கொளத்தூரை அடுத்த கருங்கல்லூர், சேத்துக்குளி போன்ற இடங்களிலும், தர்மபுரி மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications