சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை.. ஜில் ஜில் காற்றால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னையின் பல இடங்களில் திடீரென மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்கு பிறகு பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து தற்போது வளசரவாக்கம், போரூர், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கள், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் இந்த ஆண்டு கோடையில் கடந்த வாரம் முதல்முறையாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பலத்த காற்று வீசியது
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது பலத்த காற்று வீசியது.

வெயிலின் தாக்கம்
இதனால் எப்படியும் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

திடீரென மாறிய வானிலை
வானிலை மையத்தின் அறிவிப்பை கேட்டு, இன்றாவது மழை பெய்யுமா என கடந்த ஒருவாரமாக காத்திருந்த மக்கள் இன்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆம்.. சென்னையின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது.

சென்னையில் மழை
இந்நிலையில் திடீரென பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, எழும்பூர், கோடம்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புறநகரிலும் மழை
புறநகர் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

மக்கள் மகிழ்ச்சி
மழையால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டாலும் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக பெய்யும் மழையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications