சங்கீத கலாநிதி விருது: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த சுதா ரகுநாதன்

மியூசிக் அகாடமியால் ஆண்டுதோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ள அகாடமியின் 87வது இசைவிழா மற்றும் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தவும் சுதா ரகுநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இசைவிழா (சதஸ்) நிறைவு விழாவில், சுதா ரகுநாதனுக்கு, 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படுகிறது.
மேலும், இந்த விழாவில், அகாடமியின் சார்பிலான சங்கீத கலா ஆச்சார்யா விருது பாடகர்கள் டி.பசுபதி, கல்யாணி சர்மா ஆகியோருக்கும், டி.டி.கே.விருது புல்லாங்குழல் கலைஞர் டாக்டர் பிரபஞ்சம் சீதாராமன், மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
இசை ஆராய்ச்சியாளர் விருது டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமிக்கும், வயலின் இசைக் கலைஞருக்கான பப்பு வெங்கடராமையா விருது எச்.கே.நரசிம்மமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நாட்டிய கலா ஆச்சார்யா விருது பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ள நாட்டிய விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சங்கீத கலாநிதி விருது பெறும் பாடகி சுதா ரகுநாதன், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications