Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீ தமிழில் சுகாசினியின் வீக் எண்ட் வித் ஸ்டார்ஸ்.... குஷ்பு பற்றி தெரிஞ்சுக்கங்க

நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் ஜீ தமிழ் டிவியில் வீக் எண்ட் வித் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியில் வீக் எண்ட் வித் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை நடிகை சுகாசினி தொகுத்து வழங்குகிறார். பாலிவுட் பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தென்னிந்தியாவின் கனவு கன்னியாக விளங்கிய நடிகை குஷ்பு முதல் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று தனது திரை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

பிரமாண்டமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கண்கவரும் வகையில் வழங்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி 'வீக் எண்ட் வித் ஸ்டார்ஸ்' என்னும் புத்தம் புதிய நிகழ்ச்சியை வரும் ஏப்ரல் 30 முதல் ஞாயிறு தோறும் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்ப உள்ளது.

Suhasini hosts weekend with Stars

பிரபல நட்சத்திரங்கள் தங்களது திரை உலக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியை நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் தொகுத்து வழங்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜீ தமிழ் மூலம் இவர் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகளையும், திரை உலக அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

நடிகை குஷ்பு முதல் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் குஷ்புவுடன் அவரது திரை உலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு அவருக்கு ஆச்சரியத்தை அளித்தனர். வீக் என்ட் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி நாளை ஏப்ரல் 30 முதல் ஞாயிறுதோறும் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+