ரஜினி, கமல் தான் அரசியலுக்கு வர வேண்டுமா?... களத்தில் நானும் குதிப்பேன் என்று சுஹாசினி அதிரடி!
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினி, கமல் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா மக்கள் விரும்பினால் தானும் அரசியலுக்கு வரத் தயார் என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் சினிமாவில் பெண்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : ஜெயலலிதா ஆட்சியின் கீழ் இத்தனை நாட்கள் குடிமக்களாக இருந்திருக்கிறோம்.

ஒரு பெண்ணின் ஆட்சியின் கீழ் இருந்த நாங்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கும். கமல்ஹாசனும், ரஜினிகாந்த் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? மக்கள் விருப்பப்பட்டால் நாங்கள் எல்லோரும் அரசியலுக்கு வரத் தயாராகத் தான் இருக்கிறோம்.
ஜெயலலிதாவை நம்பி மக்கள் பெரிய கொறுப்பை கொடுத்தது போல ராதிகா, ரேவதி, நதியா, சுஹாசினிக்கும் பொறுப்பு கொடுத்துப் பாருங்கள். எல்லாமே மக்கள் கையில் தான் உள்ளது, என்றும் சுஹாசினி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications