புதிய பட்டியலில் பெயர் இல்லை... தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்த சூளகிரி வாக்காளர்கள்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்காளர்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி தொகுதியில் உள்ள சூளகிரி வாக்குச்சவடியில் இன்று வாக்களிக்க வந்த அப்பகுதி மக்கள் பலர், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து புதிய வாக்காளர் பட்டியலை நீக்கி விட்டு பழைய பட்டியலைப் பயன் படுத்தும் படி வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிச் சென்றதாகவும், ஆனால் தொடர்ந்து புதிய வாக்காளர் பட்டியலின் படியே வாக்குப் பதிவு நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அனைவரும் ஒன்று கூடி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications