கொதிக்கும் சூரியன் இன்னும் சுடப்போகுது.... மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் வரும் 4ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நீடிக்கிறது.
சென்னை: தமிழகத்தில் வரும் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி 28 வரை நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. மார்ச் மாதத்திலேயே பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது.
ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது. குளுமையான மாவட்டங்கள் கூட வெப்பத்தில் தகித்தன.

அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தொடர்ச்சியாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் இந்த அளவுக்கு வெயில் அடித்தது இல்லை. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் 4ஆம் தேதி தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது.

வெப்பத்தின் தாக்கம்
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடும் வெயிலுடன் தொடங்கும் என்று தெரிகிறது.

சுட்டெரிக்கும் சூரியன்
தமிழகத்தில் 6 இடங்களில் நேற்று 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகி வருவது, நேற்றும் தொடர்ந்தது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக நேற்று 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
கரூர் பரமத்தியில் 104 டிகிரி, திருச்சி 102.9, வேலூர் 102.9, மதுரை 102.3, திருத்தணி 102.2 ஆக வெப்பநிலை பதிவானது.

வெப்ப சலனம்
அதே நேரத்தில் வெப்பசலனம் காரணமாக குன்னூர், கொடைக்கானல், சேலம், நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 12.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதே நிலைமை வரும் 7ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருணபகவான்
வெப்ப சலனம் காரணமாக இன்றும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எது எப்படியோ..கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து, மண்டை காயும் அபாயத்திலிருந்து அவ்வப்போது வருண பகவான் மழையை பொழிய வைத்து காப்பாற்றினால் சரித்தான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications