இன்னும் ஒரு வாரத்தில் வெயிலின் தாக்கம் குறையும் - வானிலை மையம் அறிவிப்பு

அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் சென்னையில் வெயிலின் அளவு குறையாமல் கொளுத்த தொடங்கி உள்ளது.
மதுரை, நாகை, புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, கரூரில் 98 டிகிரியும் சென்னையில் 106 டிகிரியும் வெயில் சுட்டெரிக்கிறது.
வழக்கமாக சென்னையில் மதியத்திற்கு பிறகு கடல் காற்று வீசும் போது வெயிலின் அளவு ஓரளவு குறைந்து விடும். ஆனால் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் இரவிலும் புழுக்கம் அதிகம் காணப்படுகிறது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, " மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் மதியம் 4 மணிக்கு பிறகு வெப்பம் குறைந்து விடும். ஆனால் சில சமயங்களில் கடல் காற்று தாமதமாக வீசத் தொடங்கும் போதுதான் வெப்பம் அதே நிலையில் நீடிக்கும்.
தரைக்காற்று பகலில் வீசும் போது அனலாக இருக்கும். அந்த சமயத்தில் கடல் காற்று தரைப்பகுதிக்கு அதிகம் வராது.பின்னர் படிப்படியாக தரைக்காற்று குறைந்து கடல் காற்று அதிகம் கிடைக்கும் போது வெப்பம் குறையும்.
கேரளாவில் இன்னும் 1 வாரத்தில் தென் மேற்கு பருவ காற்று வீசத் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் மழையை எதிர்பார்க்க முடியும். இந்த பருவ காலம் மாற்றத்தின் காரணமாக வெப்பம் குறைய தொடங்கும். சென்னையிலும் வெப்பம் 1 வாரத்தில் குறையும்" என்று தெரிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications