விடாமல் சுட்டெரிக்குதே சூரியன்... சென்னையில் இன்று 100 டிகிரி!
சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவையில் தென் மேற்குப் பருவ மழை பெய்து வரும் போதிலும் பிற பகுதிகளில் வெயில் இன்னும் கொளுத்தவே செய்கிறது. தலைநகர் சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை வேகம் பிடித்துள்ளது. அதேபோல கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக தக்கலை, குழித்துறையில் தலா 5 செமீ மழை பதிவானது.

கன்னியாகுமரியில்
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இன்று அதிக அளவில் மழை பெய்துள்ளது. இரணியல், குளச்சல், நாகர்கோவிலில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

விடாத வெயில்
தமிழகத்தின் இதர பகுதிகளில் வெயில் தொடருகிறது. குறிப்பாக சென்னையில் இன்னும் வெயில் முழுமையாக அடங்கவில்லை. சென்னையில் 3 நாட்கள் விட்டு விட்டும், மாலை-இரவிலும் பலத்த மழை பெய்தது. தற்போது மழையைக் காணோம்.

சுட்டெரிக்கிறது
சென்னையிலும் கடலோர பகுதியிலும் மழை குறைந்துள்ளது. மீண்டும் வெப்பம் அதிகரித்து வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று சென்னையில் 100 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் 100 டிகிரியை வெயில் தொட்டது.

கானல் நீர்
வெயில் கொளுத்தியதால் சாலைகளில் மக்கள் அவஸ்தையை அனுபவிக்க நேரிட்டது. பல சாலைகளில் கடும் வெயில் காரணமாக கானல் நீரையும் பார்க்க முடிந்தது.

வார இறுதியில் மழை வரும்
இந்த வார இறுதியில் அதாவது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Badam Pisin Jelly: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான 'பாதாம் பிசின் பழக் கலவை ஜெல்லி! தயாரிப்பது எப்படி? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications