காற்று மேற்கு நோக்கி வீசுகிறதாம்... கடும் வெப்பம் ஏப்ரல் இறுதி வரை தொடருமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வெப்பம், ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்களில் கடுமையாக இருக்கிறது வெயில். அனல் காற்றுடன் பல ஊர்களில் வெயில் வெளுத்து வாங்குவதால் மக்களால் வெளியில் தலை காட்ட முடியாத நிலை.

Sun will scorkch till the month end, says Weather office

சென்னையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 100 டிகிரியைத் தாண்டி விட்டது வெயில். இதனால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தற்போது காற்று மேற்கு நோக்கி வீசி வருகிறது. இந்த நிலை தொடரும். எனவே இந்த மாத இறுதி வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

மே முதல் வாரத்தில் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் இந்த நிலையில் மாற்றம் வரும். தற்போது சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி விட்டது என்றார் அவர்.

அனல் காற்றும் வீசுமாம்

அதேபோல, கடுமையான அனல் காற்றும் இதே காலகட்டத்தில் வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் முடியும் வரை வெந்து கருக வேண்டியதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+