விலகிச்சென்ற கணவர்.. வர்ணித்த சுந்தரம்.. என்னையே கொடுத்தேன்.. அபிராமி திடுக்!

என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுத்தேன் என குன்றத்தூர் அபிராமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் அதிரடி வாக்கு மூலம்

    சென்னை: என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுத்தேன் என குன்றத்தூர் அபிராமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்,

    குன்றத்தூர் கெங்கையம்மன் கோயில் தெருவில் பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

    இந்நிலையில் தான் அபிராமிக்கு சுந்தரம் பழக்கமாகியுள்ளார், வீட்டுக்கு பிரியாணி ஆர்டர் செய்யும் அபிராமிக்கு சுந்தரம்தான் பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார்.

    தூங்க விடாத இளமை

    தூங்க விடாத இளமை

    எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. அது காமத்தில் முடிந்தது. மேலும், என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி சென்றுவிடுவதால், என் இளமை என்னை தூங்க விடவில்லை.

    இரவில் நெருங்கினால்

    இரவில் நெருங்கினால்

    மேலும் நான் இரவில் கணவர் விஜயை நெருங்கினால், அவர் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆனால் என் தெருவில் வசிக்கும் இளைஞர்கள், சிறு பையன்கள் எல்லாம் என் மீது ஜொல்லுவிட்டனர்.

    என்னையே கொடுத்தேன்

    என்னையே கொடுத்தேன்

    என் இளமையை ரசித்து, அடிக்கடி என்னை வர்ணித்த சுந்தரத்துக்கு என்னை கொடுத்தேன். அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்.

    ஆனால் சாகவில்லை

    ஆனால் சாகவில்லை

    கடந்த 30ம் தேதி இரவு இவர்களை கொல்ல முடிவு செய்தேன். அதன்படி பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை.

    மூக்கையும் வாயையும் பொத்தி

    மூக்கையும் வாயையும் பொத்தி

    வேலைக்கு சென்ற கணவருக்கு மகன் அஜய் கீழ் தளத்திற்கு சென்று ஹெல்மெட்டை கொடுத்து தந்தையை வழியனுப்பி வைத்தான். திரும்பி வந்த மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

    தீர்த்துக்கட்ட காத்திருந்தேன்

    தீர்த்துக்கட்ட காத்திருந்தேன்

    பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன். கடந்த 31ம் தேதி மாத கடைசி நாள் என்பதால் வேலை பளு காரணமாக விஜய் வீட்டிற்கு வரவில்லை.

    ஒதுக்குபுறமான இடத்தில்

    ஒதுக்குபுறமான இடத்தில்

    கணவர் காலையில் வந்தால் நான் சிக்கிக் கொள்வேன் என்பதால் இது குறித்து சுந்தரத்திடம் ஐடியா கேட்டேன். உடனே சுந்தரம் தன் வீட்டிற்கு என்னை அழைத்தார். இரவு முழுவதும் நானும் சுந்தரமும் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் உல்லாசமாக இருந்தோம்.

    அனுப்பி வைத்த சுந்தரம்

    அனுப்பி வைத்த சுந்தரம்

    விடிய தொடங்கியதும், சுந்தரம், நான் எனது வீட்டிற்கு செல்கிறேன். அப்போது தான் யாருக்கும் நம்மீது சந்தேகம் வராது. நீ உனது மொபட்டை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் ஏறி கன்னியாகுமரிக்கு சென்று விடு. 2 நாட்களில் நிலைமை சகஜமானதும் நானும் கன்னியாகுமரி வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி என்னை அனுப்பி வைத்தான்.

    தப்ப சிம்கார்டை உடைத்தேன்

    தப்ப சிம்கார்டை உடைத்தேன்

    ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் கணவன் கட்டிய தாலியை கோயம்பேட்டில் ஒரு அடகு கடையில் அடமானம் வைத்து கிடைத்த ₹50 ஆயிரத்துடன் பேருந்தில் ஏறி கன்னியாகுமரிக்கு சென்றேன். அதற்கு முன் தான் உபயோகப்படுத்திய செல்போன் சிம்கார்டை வைத்து எங்கே போலீசார் தன்னை டிரேஸ் செய்து கண்டு பிடித்து விடுவார்களோ என்று நினைத்து செல்போன் சிம்கார்டை உடைத்து எறிந்தேன்.

    காம இச்சைக்காக

    காம இச்சைக்காக

    இளமை வேகத்தில் எனது காம இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக நான் பெற்ற குழந்தைகளை என் கைகளால் கொடூரமாக கொலை செய்து விட்டேன். இவ்வாறு அபிராமி தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+