ஓடியாங்க.. ஓடியாங்க.. மாயாறு நதிக்கரையில் முட்டிக்கொண்ட "2 ஹீரோக்கள்".. பரபரக்கும் சண்டை காட்சி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: இணையத்தில் ஒரு சண்டைக்காட்சி வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. சுமார் ஒரு மணி நேரம் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் இப்போதும், ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன... இவையெல்லாம் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும்.
இந்த முதுமலை புலிகள் சரணாலயத்தில்தான், மாயாறு ஓடுகிறது.. வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருவதே இந்த மாயாறுதான்.

மாயாறு: அதனால், காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.. அப்படித்தான், மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு இன்னொரு யானையும் பின்னாடியே பிளிறிக்கொண்டு வந்தது. அப்போது 2 யானைகளும் ஒன்றுக்கொன்று முறைத்து பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தன..

Super fight scene near Masinagudi Mayar river and whats happened in the mudumalai sanctuary

தந்தங்கள்: தண்ணீரையும் குடிக்காமல், அங்கிருந்தும் நகராமல் தொடர்ந்து ஒன்றையொன்று முறைத்து நின்றபடியே இருந்தன.. ஒருகட்டத்தில், 2 யானைகளும் திடீரென சண்டை போட ஆரம்பித்து விட்டன.. இந்த பலத்த சண்டையின்போது, ஆக்ரோஷமாக பிளிறி கொண்டே இருந்தன.. மேலும், ஒன்றோடோன்று மோதும்போது, யானைகளின் தந்தங்களும் ஒன்றுக்கொன்று மோதி கொண்டன.. பிளிறல் சத்தம் + தந்தங்கள் முட்டிக் கொள்ளும் சத்தம் போன்றவை அந்த பகுதி முழுக்க பயங்கரமாக எதிரொலித்தது.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மொத்தமாக திரண்டு வந்துவிட்டனர்.. இதை பார்த்து ஒருசிலர் அங்கிருந்து பயந்து ஓடினார்கள்.. ஒருசிலர், தங்களின் செல்போன்களில் இந்த சண்டை காட்சியை வீடியோவாக எடுத்து கொண்டனர்.. இந்த யானைகளின் சண்டை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது.. அதன் பிறகு 2 யானைகளும், ஆளுக்கொருபக்கம் காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.

மசினகுடி வீடியோ: மசினகுடி மாயாறுவில் நடந்த இந்த சண்டை காட்சிதான், சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும், மசினக்குடி காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை தன்னுடைய ட்விட்டர் இணையதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்... 2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட பரபரக்கும் சண்டை காட்சிகளை, இணையவாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

யானைகள்: இப்படித்தான் 3 யானைகள் மேட்டுப்பாளையத்தில் இன்னமும் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றன.. பாகுபலி யானைகள் என்று அதற்கு பெயராம்.. கிராமத்துக்குள் இருந்த மாடுகளை யானைகள் துரத்தியடித்துள்ளது.. மக்கள், அச்சம் அடைந்து தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்துள்ளனர்.. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியபடியே உள்ளது.. அதனால், அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+