சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.0 எப்போ ரிலீஸ் தெரியுமா? படக்குழு தேதி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படம் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி படம் ரிலிஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் டைரக்‌ஷனில், ரஜினிகாந்த் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக எமிஜாக்சன் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சுபாஷ் கரன் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

Super star Rajinikanth's 2.0 Movie release date has announced by the Movie team

இதில், அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த 2.0 படம் 400 கோடி ரூபாய் செலவில் இந்த தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இநந்லையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் கிராபிக்ஸ் பணிக்கு சிறிது காலம் தேவைப்படுவதால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Super star Rajinikanth's 2.0 Movie release date has announced by the Movie team. The 2.0 Movie will be released on 25th of 2018.
Please Wait while comments are loading...