திருநங்கைகளுக்கு 'மூன்றாம் பாலின' அங்கீகாரத்துடன் சலுகைகள்: உச்ச நீதிமன்றம்
சென்னை: திருநங்கைகளுக்கு 'மூன்றாம் பாலினம்' என்ற அங்கீகாரத்துடன், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகளை 'சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள்' ஆகக் கருதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருநங்கைகள் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், கூறியுள்ளதாவது:

"ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமஉரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நம் சமூகத்தில் திருநங்கைகள் மிகவும் சிறுமைப்படுத்தப்படுவதாகவும், மருத்துவமனைகளில் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தேசிய சட்ட சேவை ஆணையம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலைமைக்கு வேதனை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை என்று தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருநங்கைகள் பெறுவதற்கு, உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகளைக்கு பாலின அங்கீகாரத்துடன் சமஉரிமை வழங்கிட வழிவகுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications