திருப்பத்தூரில் அதிசயம்.. சீனிவாசன் வீட்டுல ஆச்சரியம்.. தாசில்தாரே கிளம்பி "கந்திலி" வந்துட்டாராமே
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் ஆச்சரியம் நடந்துள்ளது.. இதை பார்க்க சுற்றுவட்டாரமே திரண்டு சென்றிருக்கிறது.. என்னதான் நடந்தது?
சில நாட்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள கந்திலி என்ற கிராமம் குறித்த செய்திகள் மீடியாவில் பரபரப்பாக வெளியாகியிருந்தது.. அதாவது,

காளான் பாறை: அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு காளான் வடிவத்திலேயே இங்கு பாறைகள் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, இஸ்ரேல் நாடு நிகோல் டிம்னா பூங்காவில், இத்தகைய காளான் வடிவத்தில் பாறைகள் உள்ளன.
அதேபோன்று இந்தியாவில், தார் பாலைவனத்திலும் இந்த பாறைகள் உள்ள நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்ற இடத்திலும் கண்டறியப்பட்டன.
பூஜைகள்: இந்த பாறைகளுக்கு விசேஷ பூஜை நடைபெறுமாம்.. இங்குள்ள கோயிலில் விழா நடத்தும்போதெல்லாம், இந்த பாறையின் பக்கத்தில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்களாம். குடையை போல, காளான் மாதிரி இருந்தாலும், இது நிஜமான பாறை.. அதுவும் கடினமான, மென்மையான, அடுக்குகளை கொண்ட பாறை...
காற்றால் கடத்தி வரப்படும் மணல் துகளால் தாக்கப்பட்டு, நாளடைவில் அந்த பாறைகளின் கீழ்ப்பகுதி மணல் அரிப்பால் சேதமடைந்து, காளான் போன்ற வடிவில் அமைந்துவிடுவதாக சொல்கிறார்கள். நீண்டகால அரிப்பினால் பாறை தூணானது தரையை ஒட்டி மட்டும் அரிப்புக்கு உள்ளாகி, மேற்புறம் விரிந்த நிலையில் காளான் போன்று தோற்றமளிப்பதால், இதை காளான் பாறை என்கிறார்கள்.
விவசாயி : இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில், அதே கந்திலி பகுதியில் இன்னொரு அதிசயம் நடந்துள்ளது.. கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவர் ஒரு விவசாயி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டியிருக்கிறார்.. அப்போது சிறிய அளவிலான கொப்பரைகள் மற்றும் மண் சுவடுகள், மண் பாத்திரங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், ஈமப்பேழை போன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன..
ஆச்சரியம்: இதைக்கேள்விப்பட்டு அந்த பகுதி மக்களும் ஒன்று திரண்டு வந்தனர்.. பிறகு, ஊராட்சி மன்ற தலைவர், தாசில்தாருக்கு இதுகுறித்து சீனிவாசன் தெரிவிக்கவும், அவர்களும் விரைந்து வந்தனர். மேலும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரான ஆ.பிரபு சம்பவ இடத்துக்கு வந்து பொருட்களை ஆய்வு செய்தார்
இதுகுறித்து அவர் சொன்னபோது, "இந்த பொருட்கள் எல்லாம் பெருங்கற்காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். பெருங்கற்காலத்தில் யாராவது இறந்துவிட்டால், அவர்களை அடக்கம் செய்யும்போது, அவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களையும், அவர்களுடனேயே வைத்து அடக்கம் செய்யும் பழக்கம் அன்று இருந்துள்ளது.
தமிழக அரசு: கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், ஈமப்பேழை உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், இவை திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றினை சேர்ந்ததாக இருக்கலாம்.. எனினும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் இந்த இடத்தில் முறையான அகழாய்வினை மேற்கொள்ளும்போது, இன்னும் பல அரிய உண்மைகள் வெளிவரலாம்' என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications