அப்ப உங்க கவனமெல்லாம் சொம்பு மேலேயதான் இருக்கா சுதீஷ்...!?
சேலம் : நான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெறும்போது, சேலம் தொகுதிக்குத் தேவையான நிதிகளை தங்கு தடையில்லாமல் பெற்று வேண்டியதைச் செய்து தருவேன் என்று பேசியுள்ளார் விஜயகாந்த் மச்சான் சுதீஷ்.
எல்லோரும் வெற்றி பெறுவதைப் பற்றிப் பேசி வரும் நிலையில், அமைச்சராகவே ஆகி விட்டார் சுதீஷ்.
சேலத்தில அவர் பேசியப் பேச்சைக் கேட்டபோது அடேங்கப்பா என்றுதான் மலைப்பு வந்தது. அப்படி ஒரு மிதப்பாக பேசினார் சுதீஷ்.

எங்க பார்த்தாலும் எதிர்ப்பு
சுதீஷுக்கு உண்மையில் சேலத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பாமகவினர் செம அதிருப்தியுடன் உள்ளனர். சரியாக வேலை பார்க்காமல் உள்ளனர்.

முஸ்லீம்கள் கடும் கோபம்
அதேபோல முஸ்லீம்களும் சுதீஷ் மீது காட்டமாக உள்ளனர். காரணம், அவர் மோடி பெயரைச் சொல்லி வாக்கு கேட்டுக் கொண்டிருப்பதால்.

கோட்டை மசூதியில் கொந்தளித்த முஸ்லீம்கள்
கோட்டை ஜாமியா மசூதியில் சில நாட்களுக்கு முன்பு சுதீஷ் வாக்கு கேட்டு வந்தபோது முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தேமுதிகவினர் மோதப் பாய்ந்ததால் பிரச்சினை பெரிதாகி விட்டது.

கிச்சிப்பாளையத்தில் மறுபடியும் மோதல்
இந்த நிலையில், புதன்கிழமை சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய சுதீஷ், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கிச்சிப்பாளையம், முகமது புறா, வ.உ.சி. மார்க்கெட் பின்புற வீதிகளில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

கருப்புக கொடியுடன் திரண்ட முஸ்லீம்கள்
ஆனால், பாஜக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷ், தங்கள் பகுதிக்கு வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர், கிச்சிப்பாளையம் கருவாட்டுப் பாலம் ஓடைப் பகுதியில் புதன்கிழமை மாலை திரண்டிருந்தனர்.

போலீஸார் விரைந்தனர்
இதுகுறித்து அறிந்ததும் கிச்சிப்பாளையம், டவுன் காவல் துறையினர் விரைந்து சென்று இல்லாமியர்களைச் சமாதானம் செய்தனர்.

பின்வாங்கிய சுதீஷ்
இதற்கிடையே, தனக்கு இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி காட்ட இருப்பதை அறிந்ததும் அங்கு பிரசாரத்துக்கு செல்லும் தனது முடிவை சுதீஷ் கைவிட்டுவிட்டார்.

நான் அமைச்சரானதும...
முன்னதாக வேறு ஒரு இடத்தில் நடந்த கூட்டத்தில் சுதீஷ் பேசுகையில், சேலம் தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி. நரேந்திரமோடியின் அமைச்சரவையில் இடம் பெற்று தொகுதிக்கு தேவையான நிதியை பெற்று தொகுதியை முன்னேற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தருவேன். இதுதான் எனது குறிக்கோள் என்றார்.
சுதீஷின் குறிக்கோள் இப்போது நன்றாகவே புரிகிறது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications