கருணாநிதி, ஜெயலலிதா வடமொழிப் பெயர்கள்தானே?- சுப்பிரமணிய சுவாமி
சென்னை: பள்ளிகளில் 'சமஸ்கிருத வாரம்' அனுசரிக்கப்படுவதை கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எதிர்ப்பது சரியல்ல என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அவர்களின் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாசா சர்டிபிகேட்
சமூக வலைத்தளத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த சுப்ரமணியசுவாமி, "சமஸ்கிருதம் எதிர்காலத்தின் மொழி. நாசாவே சமஸ்கிருத மொழிதான் கணினிக்கு இலகுவானது என்பதை அடையாளம் கண்டு கொண்டுள்ளது.

சமஸ்கிருத வாரம்
இன்று சமஸ்கிருத வாரம் என்பதை கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்க்கின்றனர். அப்படியென்றால் பெயரை மாற்றிக் கொள்ளட்டும்.

சமஸ்கிருதப் பெயர்
ஜெயலலிதா என்பது சமஸ்கிருதப் பெயர். கருணாநிதி என்பதும் சமஸ்கிருதப் பெயர்" என்று கூறியுள்ளார் சுவாமி.

தேசநலன் முக்கியம்
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநில நலன்கள் தேச நலன்களைக் கடந்து செல்லக்கூடாது என்றார். "நான் இதனை தமிழ்நாட்டை வைத்தே கூறினேன், தமிழர்களின் நலன் தேச நலன்களைத் தாண்டிச் செல்லக்கூடாது.

சீனாவின் கை ஓங்கியது
முந்தைய ஆட்சியின் முட்டாள் தனத்தினால் இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கை ஒங்கியுள்ளது" என்றார்.

முஸ்லீம்களுடன் பேச்சு
"ராமர் கோவில் விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்தினருடன் நிச்சயம் பேச்சு வார்த்தைகள் நடத்துவோம். இஸ்லாம் இறையியல்வாதிகளின் உதவியுடன், மதுரா, அயோத்தி, மற்றும் காசியில் இருக்கும் 3 கட்டுமானங்களை ஏற்க பேச்சு வார்த்தைகள் நடத்துவோம், மசூதிக்கு வேறு இடம் ஒதுக்கிக் கட்டித் தர ஏற்பாடுகள் செய்வோம்" என்றார் அவர்.

மோடியின் சமுதாயப் புரட்சி
அவர் மேலும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், "பாஜக-வில் ஒரு குடும்பம் என்பது இல்லை. தனிநபர்கள் பாஜகவில் ஒட்டுமொத்த அதிகாரத்தை அடைய முடியாது. நரேந்திர மோடி சமுதாயப் புரட்சியை பிரதிநித்துவம் செய்யும் நபர்" என்று கூறினார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications