சென்னை வருகிறார் சாமி.. 'வரவேற்பு' கொடுப்பார்களா அதிமுகவினர்?
சென்னை: ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி முக்கியப் புள்ளியான சுப்பிரமணியம் சாமி சென்னைக்கு வரவுள்ளார்.
சாமி மீது ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சரமாரியாக அவதூறு வழக்குகளைப் போட்டார். இதையடுத்து கைது பயத்தால் சென்னை பக்கமே வராமல் இருந்தார் சாமி. தற்போது ஜெயலலிதா ஜெயிலுக்குப் போய் விட்ட நிலையில் சாமி சென்னைக்கு வரவுள்ளார்.

ராஜபக்சேவின் கைக்கூலியாக தமிழர்களால் கோபத்துடன் பார்க்கப்படுபவர் சாமி. இவரது இலங்கை ஆதரவு செயல்பாடுகள் தமிழகத்தின் பல்வேறு தரப்பினரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வருக்கு எதிராகவும் பேசியதால்தான் இவர் மீது சில அவதூறு வழக்குகளை அப்போதைய ஜெயலலிதா அரசு போட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போக முக்கியக் காரணமானவர் சாமி என்பதால் அவர் மீது அதிமுகவினர் கடும் கோபத்துடன் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இன்று இரவு சென்னைக்கு வருகிறார் சாமி. நாளை அவர் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தண்டனையில் இருந்து ஜெயலலிதா ஜாமீன் கேட்கும் விவகாரம், தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து "முக்கிய" பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் சாமி சென்னைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமியைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி கொடுத்த "பலத்த வரவேற்பு" மக்கள் கண்களிலிருந்து இன்னும் கூட மறையவில்லை. அந்த வரவேற்புக்குத் தலைமை தாங்கியவர் இப்போதைய அமைச்சர் பா. வளர்மதி ஆவார்.
எனவே இந்த முறையும் அதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications