வாகன ஓட்டுனர்களின் கவனத்துக்கு.. இனிமேல் "இது" உங்களுக்கு கட்டாயம்..தமிழ்நாடு அரசு பிறப்பித்த அதிரடி
சென்னை: அரசு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், வாகன விபத்துகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதற்கான விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது..
இதற்காகவே, சாலை பாதுகாப்பு வாரமும் கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த சாலை பாதுகாப்பு வார விழாக்களில், பல்வேறு விழிப்புணர்வுகளும், அறிவுரைகளும் வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

சாலை விபத்துகள்: நீண்ட தூர பயணமாக கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால் அவர்கள் சோர்வடைந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதால், அத்தகைய வாகனங்களை நிறுத்தி டிரைவர்களுக்கு தேநீர் இலவசமாக வழங்கி, நீண்ட பயணம் செய்யும் வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் ஓய்வெடுத்து பிறகு வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பணிமனை வளாகம்: அதேபோல, அரசு பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பணிமனை வளாகத்தில் இலவசமாக கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து அவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்படுவது வழக்கம்... இந்த பரிசோதனையும் வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இன்னொரு முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, கண்பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.. அதில், 50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண், காது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே சம்பளம்: இதற்காக சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என கூறியுள்ள அவ்வறிக்கை ஒருவேளை மருத்துவர்கள் ஓட்டுநர்களை பரிசோதித்து தகுதியற்றவர்கள் என தெரியவந்தால் அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கண், காது மருத்துவ பரிசோதனையில் தகுதியற்றவர்களாக கண்டறியப்படுபவர்கள் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளில் அதே சம்பளத்தில் நியமிக்கப்படுவர் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications