Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகை அலற வைக்கும் ஜிக்கா.... தாக்காமல் தப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசரநிலை பிரகடனப்படுத்தும் அளவிற்கு உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஜிக்கா வைரஸ். இந்தியாவில் சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், டெங்கு என எத்தனையோ காய்ச்சல்களை பார்த்திருந்தாலும் இந்த ஜிக்கா வைரஸ் இன்னும் இந்தியாவிற்குள் வரவில்லை என்று நம்பிக்கையாக தெரிவத்துள்ளது மத்திய அரசு.

ஜிக்கா பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதாலேயே உலக நாடுகளிடையே அச்சம் எழுந்துள்ளது.

பிளேவி வைரஸ் என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஜிக்கா வைரஸ். ஜிக்கா வைரஸ் ஒருவருக்குப் பரவினால் காய்ச்சல் மட்டும் இன்றி மூட்டு இணைப்புகளில் வலி ஏற்படும். மேலும், கடுமையான தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கொசுவால் பரவும் வைரஸ்

கொசுவால் பரவும் வைரஸ்

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவுக்குப் பெயர் 'ஏடிஸ் எஜிப்டி.' இந்த கொசு மூலமாகத்தான் ஜிக்கா வைரஸும் பரவிவருகிறது. 1947ல் உகாண்டாவில் உள்ள ஜிக்கா காட்டில் குரங்குகளிடம் இந்த வைரஸ் முதல்முறையாக கண்டறியப்பட்டது. இதனால் வைரஸுக்கு ஜிக்கா என்று பெயரிடப்பட்டது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் சில நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.

அமெரிக்க நாடுகள் அலறல்

அமெரிக்க நாடுகள் அலறல்

தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் அடுத்த ஆண்டுக்குள் 4 மில்லியன் மக்கள் ஜிகா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

பிரேசில் பாதிப்பு

பிரேசில் பாதிப்பு

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த ஆண்டு மே மாதம் ஜிக்கா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 25 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. அந்த நாடுகளில் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 15 லட்சம் பேர் உள்ளனர்.

தடுப்பூசி கிடையாது

தடுப்பூசி கிடையாது

ஜிக்கா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆரம்ப நாட்களில் காய்ச்சல் குறைவாகத்தான் இருக்கும். தோல் கடுமையாகப் பாதிக்கப்படும். இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இந்தக் காய்ச்சல் இருக்கும். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை.

கர்ப்பிணிகள் பாதிப்பு

கர்ப்பிணிகள் பாதிப்பு

ஜிக்கா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதால் அது கருவில் உள்ள குழந்தைகளையும் தாக்கி குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இதுவரை இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

தடுப்பது எப்படி?

தடுப்பது எப்படி?

இந்தியாவில் 'ஏடிஸ் எஜிப்டி' கொசு அதிகம் காணப்படுகிறது என்பதால், ஜிக்கா வைரஸ் எளிதில் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. ஏடிஸ் எஜிப்டி' கொசு, காலை மற்றும் மாலை வேளைகளில்தான் அதிகம் வெளியேவரும். எனவே, காலை ஒன்பது மணி வரையும், மதியம் மூன்று மணிக்குப் பிறகும் ஜன்னல்களைச் சாத்திவிடுவது நல்லது.

மத்திய அரசு ரெட் அலெர்ட்

மத்திய அரசு ரெட் அலெர்ட்

சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் ஜிக்கா வைரஸ் குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்படும். வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள், சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வைரஸ் தாக்கம் இந்தியாவில் இல்லை. ஜிக்கா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா போகாதீங்க

அமெரிக்கா போகாதீங்க

சுகாதாரத்துறை பொது இயக்குனர் தலைமையில் கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. வைரஸ் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் அறிவுறுத்தி உள்ளோம். சுகாதார கண்காணிப்பு மையங்களில் அதிரடி மருத்துவக் குழுவினர் நியமிக்கப்படுகிறார்கள். டெல்லி தேசிய நோய் தடுப்பு மையத்தில் வைரஸ் ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வைரஸ் பாதிப்பு நாடுகளுக்குச் செல்வதை பயணிகள் குறிப்பாக கர்ப்பிணிகள் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வரும்முன் தடுக்கலாம்.

வரும்முன் தடுக்கலாம்.

இந்தியாவில் விரைவில் வெயில் காலம் துவங்கவிருப்பதால், ஜிகா வைரஸ் வீரியமாக பரவும் வாய்ப்புகள் குறைவுதான். எனினும் வரும்முன் மேற்கொள்ளவேண்டியவைகளை அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள். டெங்கு காய்ச்சலுக்குச் சாப்பிடும் நிலவேம்புக் கஷாயம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பதால், அவ்வப்போது அனைவருமே நில வேம்புக் கஷாயம் குடிப்பது நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

சத்தான உணவுகள்

சத்தான உணவுகள்

காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நன்றாகச் சுத்தம்செய்து சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வெளி இடங்களில் தண்ணீர் அருந்தாமல், பாதுகாப்பான முறையில் வீட்டில் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரையே அருந்துங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலே போதும் ஜிக்கா எல்லாம் சுக்காவாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+