தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ”தபால் ஓட்டு” உரிமை வேண்டும் – டி.ஆர்.பாலு நோட்டீஸ்
சென்னை: தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளார்.
திமுக தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் , திமுக பாராளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு சார்பில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தி.மு.க. தலைமை கழக வக்கீல் இ.பரந்தாமன் நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதன்படி, "நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்றிய அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிச்சான்றிதழ் மற்றும் தபால் வாக்குகள், தேர்தல் அலுவலர்களால் வழங்கப்படாதது குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தனித்தனியாக புகார் அளித்திருந்தனர்.
ஆனால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தபால் ஓட்டுகள் பதிவு செய்திட குறைந்த கால அவகாசமே உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவின் வக்கீலான இ.பரந்தாமன், தி.மு.க. வக்கீல்கள் ஆர்.நீலகண்டன், பி.நம்பிசெல்வன் ஆகியோர் மூலம், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கு வருகின்ற ஒவ்வொரு பணியாளருக்கும், தேர்தல் பணிக்கான "நியமன உத்தரவு" வழங்கப்படும்போதே, அவருக்கான தபால் ஓட்டு படிவத்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தும், பலஇடங்களில் தேர்தல் ஆணையத்தின் இவ்வழிகாட்டுதல், தேர்தல் அலுவலர்களால் சரிவர கடைபிடிக்காததால், தேர்தல் பணியாற்றிய பின்பும், தேர்தல் பணியாளர்கள் தங்களுக்குரிய தபால் ஓட்டு படிவத்தினை பெற்று, வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோர் இப்பிரச்சினையில் தலையிட்டு, அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, தேர்தல் பணியாற்றிய அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் அனைவருக்கும் தேர்தல் பணிச்சான்றிதழ்-தபால் வாக்குகள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ‘‘நியாயமாகவும் நேர்மையாகவும் எவ்வித புகாருக்கும் இடங்கொடுக்காமல் தேர்தல் நடத்தப்படும்'' என்று கொடுக்கப்பட்ட உத்திரவாதம் மீறப்படும் செயலாக கருதி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தி.மு.க. வக்கீல்கள் தங்களுடைய நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்"என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications