தேமுதிகவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்- பொன். ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேமுதிகவுடன் தொடர்ந்து தொகுதி்ப் பங்கீடு தொடர்பாக பேசிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

தமிழக லோக்சபா களத்தில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள பாஜக இதுவரை மதிமுக, பாமக மற்றும் சிறிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. தற்போது தேமுதிகவுடன் பேச்சு நடந்து வருகிறது.

ஆரம்பத்தில் முரண்டு பிடித்த பாமகவும், தேமுதிகவும் தற்போது இறங்கி வந்திருப்பதால் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

pon radhakrishnan and vijayakanth

பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பொன். ராதாகிருஷ்ணன், வலுவான கூட்டணியை அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது பாஜக.

எந்த கட்சிகளும் ஒத்த கொள்கைகளை கொண்டவை அல்ல. ஆனால், அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வது வழக்கமான ஒன்று. எனவே, எங்கள் கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் சேர்வதில் எந்த குழப்பமும், பிரச்னை இல்லை.

தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிறிய கட்சிகளை கூட இணைந்து எங்களது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+