For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 தமிழர் விடுதலையை எதிர்ப்பதா? தமிழகம், புதுவையில் சோனியா, ராகுல் கொடும்பாவி எரிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் இன்று தமிழகம், புதுவையில் எரிக்கப்பட்டன.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. மூன்று தமிழரின் தூக்கை ரத்து செய்ததை எதிர்த்தும் மத்திய அரசு மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்தது.

இதனைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் உருவபொம்மைகள் இன்று தமிழகம், புதுவையில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினரால் எரிக்கப்பட்டன.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் மின் ரயில்களை எரித்து சோனியா- ராகுல் கொடும்பாவிகளை கொளுத்தினர். இதேபோல் பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே நாம் தமிழர் கட்சியினர் சோனியா, ராகுல் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil activists burn effigy of Sonia, Rahul after Centre opposes release of Rajiv convicts

புதுச்சேரியில் காமராசர் சிலை அருகே கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கடலூர், கோவையிலும் இதேபோல் கொடும்பாவி உருவங்கள் எரிக்கப்பட்டன.

English summary
Tamil activists burnt the effigy of Sonia Gandhi in Tamilnadu and Pudhucherry on Satruday. The protesters condemned the central government's decision to oppose the release of the seven people convicted in Rajiv Gandhi assassination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X