கொள்கையா ... அந்த வார்த்தையை கேட்டதும் தலை சுத்திருச்சு : ஊடகங்களை கலாய்த்த ரஜினி
கொள்கை என்கிற வார்த்தையைக் கேட்டாலே தனக்கு தலை சுற்றுவதாக ரஜினி கிண்டலாக குறிப்பிட்டு உள்ளார்.
Recommended Video

சென்னை : அரசியல்வாதிகளை விட ஊடகங்களை சமாளிப்பது குறித்து தான் இத்தனை நாட்களாக யோசிக்க வேண்டியதாக இருந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பத்திற்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

கடந்த 26ம் தேதி முதல் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார். 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று ஏற்கனவே ரஜினி தெரிவித்து இருந்ததால், இன்று காலையில் இருந்தே அவரது ரசிகர்கள் உட்பட மக்களும் அவர் என்ன அறிவிப்பார் என்று உற்சாகத்துடன் காத்து இருந்தனர்.
இந்நிலையில்ரசிகர்களிடம் பேசிய ரஜினி, தான் அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதன் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். மேலும், தமிழகத்தின் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்து இருப்பதால் நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஊடகங்களிடம் எப்போதும் உஷாராக இருக்கவேண்டும் என்று அரசியல் விமர்சகர் சோ தன்னிடம் அடிக்கடி தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தி வந்ததையும் ரஜினி குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவது குறித்த எண்ணம் இருந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடகங்களை கண்டு தான் மிகவும் யோசித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஊடகங்களை தவிர்க்க முடிவதில்லை, எதையாவது சொன்னாலும் அதை விவாதமாக்கிவிடுகிறார்கள். அதுவே தனக்கு பயத்தைக் கொடுத்ததாக ரஜினி குறிப்பிட்டு உள்ளார்.
ராகவேந்திரா மண்டபத்திற்கு வருவதற்காக காரில் எப்போது வெளியே வந்தாலும், கட்சி ஆரம்பிக்கிறீர்களா? உங்கள் கொள்கை என்ன ? என்று மைக்கை நீட்டி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கொள்கையா? இந்த வார்த்தையை கேட்டாலே தனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது. சில சின்ன பசங்கதான். இட்ஸ் ஓகே. என்று ரஜினி கிண்டலாக குறிப்பிட்டார். ரஜினியின் இந்த பேச்சிற்கு ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மேலும், மக்களுக்கு உண்மையான ஆன்மீக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், உண்மை உழைப்பு உயர்வே தனது செயல் மந்திரம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications