சம்பள பாக்கி... தற்கொலைக்கு முயற்சித்த துணை நடிகர் அரசு
சென்னை: தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள இளவரசன் என்கிற அரசு எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதாகும் இளவரசன் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சிறுத்தை', 'சகுனி' உள்ளிட்டப் படங்களில் துணை நடிகராக நடித்தவர். இவர் நடித்த சில படங்களுக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் தராத காரணத்தால் குடும்பம் நடத்த அவதிப்படுவதாக தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷாலுக்கு இளவரசன் எழுதியுள்ள தற்கொலைக் கடிதத்தில், பல முறை தனது பிரச்னைகளை விஷாலுக்கு தெரிவிக்க முயற்சித்ததாகவும், தன்னை போன்று குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கு விஷால் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.கே.பி நகரில் மனைவி சசிகலா, மகன் சிவாவுடன் வசித்து வந்தார் இளவரசன். சினிமாவில் நடித்தும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை வாங்க முடியாததை காரணமாக கூறி அவரது மனைவி அடிக்கடி சண்டை போடுவாராம்.
சண்டை பெரிதாகவே அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதோடு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்த நண்பர் ஓடி வந்து இளவரசனை சென்னையில் உள்ள ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுப்பிவைத்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஹீரோ, ஹீரோயின்களுக்கு சிங்கிள் பேமெண்ட் செக் என கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் தயாரிப்பாளர்கள் துணை நடிகர்கள், பாடல் ஆசிரியர்களுக்கு சம்பளபாக்கி வைத்து அவர்களை வதைப்பது ஏன் என்று தெரியவில்லை. சம்பள பாக்கியால் சிகிச்சை செய்ய முடியாமல் பாடல் ஆசிரியர் முத்துக்குமார் உயிரிழந்த சோகம் மறைவதற்கு முன்பு தற்போது துணை நடிகர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications