சிலை கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது...கல்லூரி மாணவர் உள்பட 12 பேருக்கு வலை வீச்சு
சென்னை : திருடப்பட்ட கோவில் சிலைகளை கடத்தி வீட்டில் வைத்து பேரம் பேசிய புகாரில் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் திரைத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை மேற்கு மாம்பலத்திலிருந்து, ரூ.80 கோடி மதிப்புள்ள 8 பஞ்சலோக சிலைகளை கடத்தி வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனலிங்கம் என்பவரை கைது செய்தனர்.

இவர், திரைப்படத் துறையில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்தார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், திருடப்பட்ட சிலைகளுக்கு இயக்குநர் வி.சேகர்
வீட்டில் வைத்து பேரம் பேசியதாக அவர் கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கில் இயக்குநர் வி.சேகரையும் சேர்க்க போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், வி.சேகரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்பப்பாங்கான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி.சேகர். இவர் ‘பொண்டாட்டி சொன்னா கேக்கணும்', ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்', ‘வரவு எட்டணா செலவு பத்தணா', ‘பொங்கலோ பொங்கல்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இந்நிலையில் வி.சேகர் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications