நாங்களும் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம்ல... 'கணக்கு' காட்டிவிட்டு எஸ்கேப்பான திரை உலகம்!
திரை உலகத்தினர் நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்பதற்காக இன்று மவுனப் போராட்டம் நடத்தி உள்ளனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் எதிர்ப்புக்காக தமிழகமே போராடி வருகிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் திரை உலகத்தினர் நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்பதற்காக இன்று பெயர் அளவுக்கு ஒரு போராட்டம் நடத்தி முடித்திருக்கிறது திரை உலகம்.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதலே தமிழகம் தொடர்ந்து போராட்ட களமாகத்தான் இருந்து வருகிறது. தற்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றுக்காக ஒட்டுமொத்த தமிழகமே போராடி வருகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் துரோகம் செய்துவிட்டது மத்திய அரசு. இதனால் தமிழகமே கொந்தளித்து போயுள்ளது.
அரசியல் களத்துக்கு வந்துவிட்ட ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். ஆனால் தங்களது படங்களுக்கு கர்நாடகாவில் பாதிப்பு வந்துவிடுமோ என பெரும்பாலான நடிகர்கள் மவுனமாக இருந்தனர்.

இதனால் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இப்போது நாங்களும் போராட்டம் நடத்தினோம் பாருங்க என்பதற்காக மவுன அறவழி போராட்டம் என கூறி 'அரட்டை கச்சேரி' ஒன்றை 4 மணிநேரம் மட்டுமே நடத்தி முடித்திருக்கிறது திரை உலகம்,.
இந்த கூட்டத்தில் ஏதாவது பேச போய் புதிய படங்கள் வரும் போது கர்நாடகாவில் வெளியிட முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் இந்த மவுன அறவழி போராட்டம். இதில் அமர்ந்ந்த பெரும்பாலான நடிகர்கள் ஏதோ பிக்னிக் வந்தது போல உட்கார்ந்தனர். இன்னும் சிலர் முகத்தை எங்கே டிவியில் காட்டிவிடுவார்களோ? என அஞ்சி பதுங்கிக் கொண்டிருப்பதையும்தான் பார்க்க முடிந்தது.

பின்னர் மிக சரியாக பகல் 1 மணிக்கு மவுன அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மத்திய உணவுக்கு கிளம்பி போய்விட்டனர்.
இதன் பெயர் 'போராட்டம்'?
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications