லெக்கின்ஸ்: ஆபாச படங்களுடன் கட்டுரையைப் போட்டு ஊரெங்கும் திட்டு வாங்கும் குமுதம் ரிப்போர்ட்டர்!
சென்னை: பெண்கள் லெக்கின்ஸ் அணிவது ஆபாசமாக இருப்பதாக கூறி, தனது அட்டைப்படத்தில் மூன்று லெகின்ஸ் அணிந்த பெண்களின் புகைப்படங்களை தவறான கோணத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குமுதம் வார இதழ்.
அந்தப் பெண்களுக்குத் தெரியாமல், அவர்களது அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இதுதான் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
பெண்களின் ஆடைகளால் தான் பெரும்பாலான பலாத்காரங்கள் நடப்பதாக அவ்வப்போது சிலர் குரல் எழுப்புவதுண்டு. ஆனால், எது ஆபாசம் என்ற கேள்விக்கு பதில் நம் பார்வையில் தான் உள்ளது.

ஆடை சுதந்திரம் இல்லையா?
இயந்திர உலகில் குடும்பத்திற்காக, தனக்காக என ஆண்களுக்கு சமமாய் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆடை அணிவது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

ஆபாசத்தின் உச்சம்...
லெகின்ஸ் அணிவது தான் ஆபாசமென்றால், சில பெண்களின் பின் பகுதியை ஆடை விலகிய நிலையில் மறைந்திருந்து எடுத்த குமுதத்தின் கண்ணோட்டத்தை ஆபாசத்தின் உச்சம் என்றே கூறலாம்.
|
பார்வையில் தான் குற்றம்...
இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. லெகின்ஸில் இல்லை ஆபாசம் உங்களது பார்வையில் தான் என நெட்டிசன்கள் குமுதத்தை கிழியாய் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
|
பாடம் புகட்ட வேண்டும்...
சில பெண்கள் ஒரு படி மேலே போய், ‘பெண்களே லெகின்ஸ் அணிந்த உங்களது புகைப்படத்தை குமுதத்திற்கு அனுப்பி வைத்தது, ஆபாசம் என்பது உங்கள் மூளையில் தான் உள்ளது என பாடம் புகட்டுங்கள்' என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

ஊருக்கு ஒரு நியாயமா?
பேஸ்புக் பக்கம் ஒன்றில், ஒருவர் கருத்து தெரிவிக்கையில் முகம் தெரியாத இந்தப் பெண்களில் யாராவது ஒருவர் அந்த புகைப்படத்தை எடுத்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர் என்ன செய்வார் என்று சுரீர் என கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications