சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: திருமா, வேல்முருகன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா உள்ளிட்டோர் கைது
இலங்கை போலீசாரால் யாழ். பல்கலை. மாணவர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.
சென்னை: யாழ்ப்பாணத்தில் இலங்கை போலீசாரால் 2 அப்பாவி தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை தமிழர் என்ற காரணத்துக்காக இலங்கை போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். இப்படுகொலையைக் கண்டித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசியல் கட்சிகளும் இப்படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் அறிவித்திருந்தன.

சென்னை லயோலா கல்லூரியில் இருந்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், மதிமுக துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர்.

ஆனால் தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
-
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications