தமிழகம் முழுவதும் போராட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழிசை திடீர் சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென சந்தித்துள்ளார்.
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென சந்தித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

பல இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திடீரென சந்தித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை தமிழிசை சந்தித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications