தட்டி தூக்கும் வடக்கு..இனி மற்ற மாவட்டங்களுக்கு ‘TATA' காட்டும் ராணிப்பேட்டை! ஸ்டாலின் செய்த சம்பவம்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் புதிய உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் 17 நாட்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் தமிழகம் திரும்பினார். இந்த பயணத்தில் 7600 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 19 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குகின்றன.

இதன் மூலம் சுமார் 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்ட நிலையில், அப்போது போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி தற்போது ஆலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்யும் ஆலை புதிய உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். இந்த ஆலையின் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
உலக அளவில் சொகுசு கார் உற்பத்தியில் மிகப்பெரும் ஜாம்பவான் நிறுவனமாக இருக்கும் ஜாக்குவார் தனது ஆடம்பர கார் மாடல்கள் மூலம் மிகப் பெரிய பிராண்டாக இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கார் பாகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு புனேவில் இருக்கும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகிறது.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் இணைந்து பல பகுதிகளில் ஆலை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களும் ராணிப்பேட்டையில் பனப்பாக்கத்தில் புதிய ஆலை அமைத்து எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இது தவிர ஏற்கனவே அந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்கு உள்ள கார் மாடல்களும் இங்கு தயார் செய்யப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஃபேஸ் லிப்ட், ஹைபிரிட் மாடல் கார்களையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்த புதிய ஆலையில் உருவாக்குகின்றன. பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பட்டையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 9,000 கோடி முதலீட்டில் இந்த ஆலை, உருவாக்கப்படுகிறது.
இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இந்த ஆலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இதே போல ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பில் மெகா காலனி உற்பத்தி பூங்காவுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் ராணிப்பேட்டை 400 கோடியில் 250 ஏக்கரில் மாபெரும் காலணி தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதை அடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications