தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்குகளில் அ.தி.மு.க.,வுக்கு 39 சதவீத ஓட்டுக்களும், தி.மு.க., கூட்டணிக்கு 32 சதவீத ஓட்டுக்களும், பா.ஜ.க, கூட்டணிக்கு 4 சதவீத ஓட்டுக்களும், மற்றவர்களுக்கு 25 சதவீத ஓட்டுக்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க., 130 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி 70 தொகுதிகளும், பிற கட்சிகள் 34 தொகுதிகளிலும், பா.ஜ.க எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
