உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறப்பு.. தமிழக விவசாயிகள் வரவேற்பு
தஞ்சை: தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது என விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகம் முழுமையான தண்ணீரை வழங்கினால் தான் தமிழகத்தில் சாகுபடியை தொடர முடியும். மேலும் மேட்டூரில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும், கூடுதல் தண்ணீரை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கூட்டவும் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடியில் ஈடுபடுவதாக தமிழ விவசாயிகள் சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை தருவதை அரசியலாக்குகிறது என்று கூறிய பாலகிருஷ்ணன், காவிரி தமக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் கர்நாடகா நடந்து கொள்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications